கணவருடன் விவாகரத்து ... 73 வயதில் காதலனை திருமணம் செய்த பாட்டி

america valentinesday2022 oldladylovestory
By Petchi Avudaiappan Feb 15, 2022 06:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

அமெரிக்காவில் 73 வயதில் காதலனை மூதாட்டி ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் காதலர் தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு விதமான காதல் கதைகளும் உலக மக்களுக்கு இணையம் மூலம் அறிமுகமாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த  Carol H. Mack என்ற 73 வயது மூதாட்டி ஒருவர் திருமணமாகி 40 ஆண்டுகள் கழித்து தன் கணவரை விவாகரத்து செய்துள்ளார். அதற்கு காரணம் மூதாட்டி வேறு ஒருவரை காதலித்து வந்ததாக கூறி விரவில் மோதிரத்துடன் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. திருமணமான 40 ஆண்டுகளுக்கு பிறகு 70 வயதில் மீண்டும் சிங்கிளாக இருப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் 73 வயதில் ஒரு தொற்றுநோய்க்கு நடுவில் உண்மையான அன்பைக் கண்டுபிடிப்பேன் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை! இப்போது இது! என பதிவிட்டுள்ளார். 

மூதாட்டி முதல் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்தும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.