இடிந்து விழுந்த பால்கனி.. துணி காயப்போட சென்ற மூதாட்டி பலி
சென்னையில் துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து கீழே விழுந்ததில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை மயிலாப்பூர் பக்தவச்சலம் சாலையில் உள்ள சுமந்த் குடியிருப்பில் 82 வயதான பத்மஜா தேவி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று பத்மஜா துவைத்த துணியை இரண்டாம் மாடியில் உள்ள பால்கனியில் காயப்போடும் போது திடீரென பால்கனி இடிந்து விழுந்தது.
இதில் தவறி விழுந்த மூதாட்டி படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் குடியிருப்பு வாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.