வயதான தம்பதியின் சொத்தை அபகரிக்க திமுக பெண் கவுன்சிலர் போட்ட சதி திட்டம்..வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

dmkmember kavithadmk oldcouplecomplaint propertylaundering
By Swetha Subash Apr 12, 2022 02:29 PM GMT
Report

திமுக பெண் கவுன்சிலர் தங்களின் சொத்தை அபகரிப்பு செய்ய முயற்சித்ததாகவும், கொலை செய்ய திட்டம் தீட்டியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வயதான தம்பதியனர் புகார் அளித்துள்ளனர்.

கோவை உடையம்பாளையம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியினர் மஞ்சுளா,சிவகுமார். இவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

வயதான தம்பதியின் சொத்தை அபகரிக்க திமுக பெண் கவுன்சிலர் போட்ட சதி திட்டம்..வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | Old Couple Complaints About Dmk Kavitha Laundering

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பதியானர் கோவையில் தங்களுக்கு சொந்தமான மருந்து கம்பெனி உள்ளதாகவும் தங்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய மகள் பிரிய தர்ஷினி கம்பெனியை கவனித்து வந்ததாக தெரிவித்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு தற்போது உள்ள கோவை மாநகராட்சி 3-வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் கவிதா என்பவர் அந்த மருந்து கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததாகவும்,

கடந்த 2 ஆண்டுகளாக தங்களுடைய மகளான பிரிய தர்ஷினியை கை வசத்திற்குள் போட்டு கொண்டு சொத்தை அபகரிக்கும் நோக்கில் கவிதா என்பவர் தம்பதியினருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்ததாக தெரிவித்தார்.

வயதான தம்பதியின் சொத்தை அபகரிக்க திமுக பெண் கவுன்சிலர் போட்ட சதி திட்டம்..வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | Old Couple Complaints About Dmk Kavitha Laundering

அதே போல் தன் மகளிடம் இருந்து 5 லட்சத்திற்கும் மேல் பணம் பரித்துள்ளதாகவும், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றபோது கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மிரட்டல் விடுப்பதாகவும்,

இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளதாகவும், அதே போல் முதலமைச்சருக்கு புகார் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் கவிதா என்பவர் வயதான தம்பதியனரை கொலை முயற்சி செய்ததாக பிரிய தர்ஷினி கணவர் பூபதியிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.