ரூ.1000 பஸ் பாஸ் பெற ஜூன் 26-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னையில் விருப்பம் போல் பயணம் செய்யும் ரூ. 1,000 அரசு பஸ் பாஸ் பெற ஜூன் 26-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ.1,000 மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இதனை வைத்து பயணிகள், மாதம் முழுவதும் மாநகர பேருந்துகளில், எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காரணமாக பொது பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே மாதம் தோறும் பஸ் பாஸ் பெறுவதற்கான கால அவகாசம் 21 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் தற்போது பஸ் பாஸ் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.