சொந்தமாக வீடு, மகன், மகள் வீட்டில் வசித்தால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் - வெளியான தகவல்

By Nandhini Jun 10, 2022 10:28 AM GMT
Report

சொந்தமாக வீடு, மகன், மகள் வீட்டில் வசித்தால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

முதியோர் ஓய்வூதிய திட்டம்

உணவின்றி, ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

முதியோர் ஓய்வூதிய திட்டம் கடந்த 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 வழங்கப்பட்டது. இந்த நிதி படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

அரசு ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு சொத்துகள் இருந்தால் முதியோர் உதவிதொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்றும், மேலும், கூட்டுறவு வங்கிகளில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருந்தால், ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது

சொந்தமாக வீடு, மகன், மகள் வீட்டில் வசித்தால் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் - வெளியான தகவல் | Old Age Allowance

வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ஆதரவின்றி, உணவின்றி தவிப்போருக்கு மட்டுமே நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மூலம் பலன் பெறுவர்களுக்கு சொத்துகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பின் உதவித்தொகை நிறுத்தப்பட உள்ளது. மேலும், சொந்தமாக வீடு, மகன் அல்லது மகள் வீட்டில் வசித்து வந்தால் அவர்களுக்கு நிதியுதவி நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.