என்ன மனுஷன்ய்யா... சாலையோர டீக்கடையில் டீ குடித்த ஜெர்மன் அதிபர்...!

Delhi Olaf Scholz Viral Photos
By Nandhini Feb 27, 2023 10:22 AM GMT
Report

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் புதுடெல்லியில் உள்ள சாலையோர டீக்கடையில் டீ குடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவிற்கு வந்த ஜெர்மனி பிரதமர்

ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு புதுடெல்லிக்கு வந்துள்ளார்.

கடந்த 25ம் தேதி வந்த ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸ், ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இதனையடுத்து, ராஷ்டிரபதி பவனில் அவரது சம்பிரதாய வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தியாவுடன் புதிய தொழில்நுட்பங்கள், சுத்தமான எரிசக்தி மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு மற்றும் புவி-அரசியல் பிரச்சினைகள் குறித்தும் ஷோல்ஸ் விவாதிக்க உள்ளார்.

பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். உக்ரைன் போர், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நிலைமை மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து தற்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

olaf-scholz-favorite-tea-shop-at-a-street-corner

சாலையோர டீக்கடையில் டீ குடித்த ஜெர்மன் அதிபர்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

புதுடெல்லி, சாணக்யபுரியின் தெரு முனையில் உள்ள ஒரு கடையில் ஜெர்மனி அதிபர் டீ குடித்தார். டீயின் ருசி மிகவும் அருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த இந்திய மக்கள் சற்றே நெகிழ்ச்சி அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.