ரூ.600 கோடிக்கு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஓலா அசத்தல்
ஓலா நிறுவனம் 24 மணி நேரத்தில் ரூ.600 கோடிக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனைப் படைத்துள்ளது.
இந்தியாவில் ஓலா நிறுவனம் S1 மற்றும் S1 புரோ செக்மெண்ட் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அறிமுகம் செய்து அதற்கான முன்பதிவையும் தொடங்கியது.
தற்போது ஸ்கூட்டர்களை ஆன்லைன் மூலமாக செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் விற்பனையும் செய்து வருகிறது. இதற்காக தமிழ்நாட்டில் உற்பத்தி ஆலை ஒன்றையும் ஓலா நிறுவனம் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் முதல் நாள் விற்பனையில் ஓலா அசத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார் அதன் நிறுவன தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். சுமார் 600 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளோம் என்றும், இன்று நள்ளிரவுடன் அறிமுக விலை மீதான சலுகை நிறைவு பெறுவதால் அதற்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்' என ட்வீட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஓலா நிறுவனம் வரும் அக்டோபர் மாதம் முதல் அட்வான்ஸ் செலுத்தியவர்களுக்கு வாகனங்களை டெலிவரி செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.