ஓலா நிறுவனத்தின் 500 ஊழியர்கள் பணிநீக்கம்? - வெளியான தகவல்
By Nandhini
ஓலா நிறுவனம் அதன் மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓலா நிறுவனம் 500 ஊழியர்கள் பணிநீக்கம்?
ஓலாநிறுவனம் அதன் செயலி தொடர்பான மென்பொருள் குழுக்களில் பணிபுரிந்து வரும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியான மின்சார ஸ்கூட்டரான ஓலா எஸ் 1 ப்ரோவின் விற்பனை குறைந்ததையடுத்து, இந்த பணி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் நெட்ஃபிக்ஸ், மைக்ரோசாப்ட் மற்றும் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
