பைக் நிறுவனங்களை கதற விடும் ஓலா..அந்த பயம் இருக்கனும்..ஒரே நாளில் ரூ 600 கோடிக்கு விற்பனை

Bike Ola Sales
By Thahir Sep 17, 2021 04:31 AM GMT
Report

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை நேற்று துவங்கியது.

விற்பனையின் முதல் நாளில் மட்டும் ரூ. 600 கோடி மதிப்பிலான ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

பைக் நிறுவனங்களை கதற விடும் ஓலா..அந்த பயம் இருக்கனும்..ஒரே நாளில் ரூ 600 கோடிக்கு விற்பனை | Ola Bike Sales

மேலும், 4 நொடிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டர் விற்பனை ஆகியுள்ளதாக சிஇஓ பவிஷ் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

இதனையடுத்து, ஓலா செயலி வாயிலாக மட்டுமே ஓலா மின்சார ஸ்கூட்டர்களை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். ஸ்கூட்டர் ஒன்றுக்கு ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்வதுடன் முன் பணமாக தலா ரூ.20,000ஐ செலுத்த வேண்டும்.

முன்பணம் ரூ.20,000 செலுத்தி ஓலா மின்சார ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இன்று நள்ளிரவுடன் முன்பதிவு நேரம் முடிவடைவதால் ஏராளமானோர் அவசர அவசரமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஒரே நாளில் ரூ.600 கோடி மதிப்புக்கு மின்சார ஸ்கூட்டர்கள் விற்று தீர்ந்துள்ளதாக ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் தகவல் அளித்துள்ளார்.

எஸ் 1 என்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் விலை ரூ.99,999 ஆகவும், எஸ் 1 ப்ரோ மாடல் விலை ரூ.1,29,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.