பாலியல் ஆர்வத்தை அதிகரிக்கும் கோக், பெப்ஸி? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கோக், பெப்ஸி குடித்தால் ஆண்களுக்கு பாலியல் ஆர்வம் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
குளிர்பானங்கள்
சீனாவின் வடமேற்கு மின்ஸு பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. கார்பனேடட் குளிர்பானங்களால் கருத்தரித்தல் திறன் பாதிக்கப்படுகிறதா என்பதை ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஆண் எலிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. முதலாவது குழுவினருக்கு கோக கோலா, பெப்ஸி போன்ற பானங்களும், இன்னொரு குழுவுக்கு வெறும் தண்ணீரும் அருந்துவதற்கு கொடுக்கப்பட்டது. இந்த வாடிக்கை 15 நாட்களுக்கு தொடர்ந்தது. இறுதியாக அனைத்து எலிகளின் ஒட்டுமொத்த எடை,
பாலியல் ஆர்வம்?
விதைப்பை அளவு ஆகியவற்றை சரிபார்த்து, ரத்த பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. 15ஆம் நாள் முடிவில், கொக்க கோலா மற்றும் பிஸ்ஸி போன்ற பானங்களை அருந்திய எலிகளின் பாலியல் ஆர்வம் மேம்பட்டிருப்பது தெரியவந்தது.
அவற்றின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வை விரிவாக்கம் செய்வதன் மூலமாக விதைப்பை தொடர்புடைய நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு பலன் அளிக்கிறதா என்ற ஆய்வு இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.