கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை : அண்ணாமலை விமர்சனம்

BJP K. Annamalai
By Irumporai Feb 13, 2023 10:28 AM GMT
Report

கோவை கொலை நகரமாக மாறிகொண்டிருப்பதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது.

பாதுகாப்பற்ற சூழ்நிலை

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்திருக்கின்றன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது 

திறனற்ற திமுக அரசு

ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. 

கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை : அண்ணாமலை விமர்சனம் | Oimbatore Is Becoming A Murder City Annamalai

உடனடியாக, தமிழக அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.