மதக்கலவரத்தைத் தூண்டும் ஆ.ராசாவை ஏன் கைது செய்யவில்லை : கொந்தளித்த அண்ணாமலை

DMK BJP K. Annamalai
By Irumporai Sep 21, 2022 07:20 AM GMT
Report

பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இந்து மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பின் சார்பில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

மதக்கலவரத்தைத் தூண்டும்  ஆ.ராசாவை ஏன் கைது செய்யவில்லை : கொந்தளித்த அண்ணாமலை | Oimbatore Bjp District President Arrest Annamalai

பீளமேடு புதூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி "ஆ.ராசா தைரியம் இருந்தால் காவல் துறையினர் பாதுகாப்பு இல்லாமல் கோவையில் கால் எடுத்து வைக்கட்டும் பார்க்கிறேன்" என்று பேசினார். 

இந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர் உத்தமராமசாமியினை போலீசார் கைது செய்தநிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராசாவை ஏன் கைது செய்யவில்லை

அதில், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை, இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை.

வெறுப்பை உமிழும் ஆ.ராசாவை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமனை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.   

அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம்

மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் ஆ.ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்?

திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.