திடீரென வெடித்த எண்ணெய் டேங்கர், கரும்புகையால் சூழ்ந்த நகரம் - 20 பேர் பலி!

Nigeria Fire Accident Death
By Vinothini Jul 25, 2023 06:45 AM GMT
Report

எண்ணெய் டேங்கர் திடீரென வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து

ஆப்பிரிக்க நாடு, நைஜீரியாவில் உள்ள ஒன்டோ என்ற மாகாணத்தின் ஒடிக்போ உள்ளூர் அரசாங்கப் பகுதியான ஓரேயில் எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்து சிதறியது.

oil-tanker-exploded-in-nigeria-20-were-dead

இந்த விபத்து டேங்ரில் இருந்து எரிபொருளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர்களில் ஒருவர் வைத்திருந்த மொபைல் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு பணி

இதனை தொடர்ந்து, லாகோஸ்-பெனின் விரைவுச்சாலையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில், ஒரு தடித்த கறுப்புப் புகையுடன் பெரிய அளவிலான தீயை உண்டாக்கியது. இது முழுப் பகுதியையும் சூழ்ந்தது, மீட்புக்குழுவினர் நிலைமையை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

டேங்கர் வெடித்துச் சிதறிய விபத்தால், அப்பகுதியே தீப்பிழம்புடன் காட்சியளித்தது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.