வேலூர் மோர்தானா அணையின் கால்வாயை சட்டவிரோதமாக உடைத்தவர்கள் மீது நடவடிக்கை
மோர்தானா அணை நீர்வரத்து கால்வாயை சட்டவிரோதமாக உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள மோர்தானா அணை நிரம்பி வரும் நிலையில் வரும் 18-ம் தேதி நீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருந்தார்.
மேலும் நீர் வரத்து கால்வாய்களை சீரமைக்கவும், அதை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக மோர்தானா அணையின் நீர் வரத்து கால்வாய்களை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதில் மோர்தானா அணை இடது புற கால்வாயில் மேல்மாயில்-காங்குப்பம் பகுதியில் உள்ள கால்வாய்களில் சட்ட விரோதமாக கரைகளை உடைத்து பைப் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் இடங்களை பார்வையிட்டு உடனடியாக சட்டவிரோதமாக கரைகளை உடைத்து வைக்கப்பட்டுள்ள பைப்புகளை அகற்றியும் அந்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.