நடக்க முடியாமல் வந்த முதியவர்கள்.. அதிகாரி செருப்பால் அடித்த கொடூரம் - நடந்தது என்ன?
புகார் அளிக்க வந்த பெண்ணை அதிகாரி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் 52 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்துள்ளது. இதை ஆன்லைனில் பதிவு செய்வதற்காகத் தனது கணவருடன் கோஹாட்டில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்ததாகத் தெரிகிறது . ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்த நிலையில், மீண்டும் அந்த பெண் தனது கணவருடன் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ;சூனியம் செய்வதாகச் சந்தேகப்பட்டு..நாய் மலத்தைச் சாப்பிட வைத்த அவலம்!
அப்போது, வருவாய்த்துறை அதிகாரி நேவல் கிஷோர் கவுட்ரிடம் முறையிட்டுள்ளார்.தொடர்ந்து அதிகாரி பெண்ணிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வருவாய்த்துறை அதிகாரி தனது காலணிகளை எடுத்து அந்த பெண்ணை தாக்கியுள்ளார்.
முதியவர்கள்
இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அதிகாரி நேவல் கிஷோர் கவுட் மீது கைது செய்தனர். இதனையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.