பிப்.25 திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை

election admk bjp
By Jon Mar 01, 2021 05:25 PM GMT
Report

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக பிரதான கட்சிகளாக பார்க்கப்படும் திமுக , அதிமுக கட்சிகள் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த திமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இடம்பிடிக்காமல் இருந்த நிலையில், இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது.

இதனிடையே திமுக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி தொடரும்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை வரும் 25 ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடைபெறும். அப்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது முடிவு செய்யபடும் என கூறினார்.