திருச்சி ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை : கெட்டுப்போன 138 கிலோ இறைச்சிகள் பறிமுதல்

By Swetha Subash May 07, 2022 01:48 PM GMT
Report

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், கேரளாவில் ஷவர்மாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அதிகாரிகள் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஷவர்மா போன்ற உணவுகள் தயாரிக்கப்படும் இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், பால் பண்ணை, காட்டூர், துவாக்குடி, முசிறி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

திருச்சி ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனை : கெட்டுப்போன 138 கிலோ இறைச்சிகள் பறிமுதல் | Officers Seize 138 Kgs Of Spoiled Meat In Trichy

அப்போது 47 கடைகளில் காலாவதியான இறைச்சிகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனை செய்தபோது அவை அனைத்தும் கெட்டுப்போனது என்பது தெரியவந்தது.

இதனை விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து கடைகளுக்கு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். மிக மோசமான அசைவ உணவுகள் இருந்த நான்கு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்டப்பிரிவு 56ன் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது.

மேலும் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் 47 கடைகளில் இருந்து கெட்டுப்போன 138 கிலோ இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.