வாணியம்பாடியில் விதியை மீறிய செயல்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது
வாணியம்பாடியில் விதிமுறை மீறி செயல்பட்ட சூப்பர் மார்க்கெட் உட்பட 6 கடைகளுக்கு சீல். வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி நடவடிக்கை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா தொற்றினால் இதுவரை 210 பேர் பாதிக்கப்பட்டு அதில் 50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இன்று வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி நகர் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கனவே 3000 சதுர அடி உள்ள சூப்பர் மார்கெட் திறக்க தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் காதர் பேட்டை பகுதியில் இயங்கி வந்த சூப்பர் மார்க்கெட் மற்றும் தேனீர் கடைகளில் சோதனை மேற்கொண்டார்.
வாடிக்கையாளர்களுக்கு பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்று கூறிய நிலையில் வாடிக்கையாளர்களை அங்கேயே கூட்டமாக கூட்டி சமூக இடைவெளி இல்லாமல் இயங்கி வந்த 2 தேனீர் கடைகள் உட்பட 6 கடைகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி சீல் வைத்து நடவடிக்கை நடவடிக்கை எடுத்தார். இனி விதி முறைகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.