திண்டுக்கலில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மருந்தகத்தை சீல் வைத்த அதிகாரிகள்

Corona Lockdown Dindigul
By Mohan May 15, 2021 11:08 AM GMT
Report

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்த்த மருந்தகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

திண்டுக்கல் கிழக்கு ரத வீதியில் வந்த எஸ்.எஸ் பார்மஸி என்ற பெயரில் மருந்தகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வரக் கூடிய பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற வியாதிகளுக்கு மருந்தகத்தில் ஊசி போடுவதாக திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் இன்று மாநகர நல அலுவலர் லட்சயவர்னா தலைமையிலான அதிகாரிகள் மருந்தகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த மருந்தகத்தில் ஊசி போடப்பட்டதற்கான ஊசிகள், மருந்து பாட்டில்கள், போதை மாத்திரைகள் ஆகியவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

திண்டுக்கலில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மருந்தகத்தை சீல் வைத்த அதிகாரிகள் | Officers Seal Medical Shop Run Illegally

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் மருந்துகளை கைப்பற்றியதுடன் கையும் களவுமாக மருந்தக உரிமையாளர் அப்துல்லா பாஷாவை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு ஊசி செலுத்திய மருந்தகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இச்சம்பவம் திண்டுக்கல் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.