‘ஹீரோவா இருந்தா எனக்கென்ன’- விமான நிலையத்தில் சல்மான்கானுக்கு நிகழ்ந்த சம்பவம்

Actor salmankhan SalmanKhan Tiger3
By Petchi Avudaiappan Aug 25, 2021 06:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

 ரஷ்யா செல்வதற்காக விமான நிலையம் வந்த நடிகர் சல்மான்கானிடம் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் இணைந்து நடிக்கும் டைகர் 3 படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்யா செல்ல சல்மான் கான் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் வரிசையில் நிற்காமல் நேராக விமானம் புறப்படும் பகுதிக்குள் செல்ல முயல அவரை திருப்பி வரிசையில் வரும் படி ஒரு இளம் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி கூறினார்.

அதன்படி வரிசையில் வந்து மீண்டும் நேராக புறப்படும் பகுதிக்குள் செல்ல முயன்ற சல்மான்கானை சி.ஐ.எஸ்.எஃப் காவலர் சோம்நாத் தடுத்தி நிறுத்தி சோதனையிட்ட பிறகே உள்ளே நுழைய அனுமதித்தார்.

இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானதோடு அந்த அதிகாரிக்கும் பாராட்டுகள் குவிந்தன. இதனிடையே இந்த நிகழ்வு தொடர்பாக சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி சோம்நாத் ஊடகங்களுக்கு பேட்டியளித்ததால் அவரது செல்போனை சி.ஐ.எஸ்.எஃப் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டதாகவும், இனி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

பலரும் சி.ஐ.எஸ்.எஃப் காவல் துறையினருக்கு எதிராக கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆனால் சோம்நாத்மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும், அனைத்து காவலர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் அவரை பாராட்டுவதாகவும் சி.ஐ.எஸ்.எஃப் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.