தண்டவாளத்தில் கிடந்த நபர்!!! ரயில் வருவதற்குள் காப்பாற்றப்படும் திக் திக் காட்சிகள்

By Fathima Aug 20, 2021 07:35 PM GMT
Report

அமெரிக்காவில் சுரங்க ரயில் தண்டவாளத்தில் விழுந்து மயங்கிய பயணி ஒருவரை காவல்துறை அதிகாரி மற்றும் பயணி ஒருவர் துணிச்சலாக இறங்கி காப்பாற்றிய காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

Bronx உள்ள சுரங்க ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்து வீடியோவில், பயணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்து மயங்கி கிடப்பதை கண்ட NYPD அதிகாரி, உடனே தண்டவாளத்தில் இறங்கி பயணியை தூக்க முயல்கிறார்.

அதிகாரியால் தனியாக தூக்க முடியாததை கண்ட அங்கிருந்த பயணி ஒருவரும் தண்டவாளத்தில் இறங்கி உதவியுள்ளார்.

நிமிடங்களில் ரயில் வரவிருக்கும் நிலையில், இருவரும் சேர்ந்து பயணியை தூக்கி நடைமேடை மேலே வைத்துள்ளனர்.

பின் இருவரும் நடைமேடை மேலே ஏறிய சில நொடியில் ரயில் வந்துள்ளது.

குறித்த வீடியோவை கண்ட பலர் பயணியை காப்பாற்ற முன்வந்த பொலிஸ் அதிகாரியையும், அவருக்கு உதவியாக வந்த பயணியையும் பாராட்டியுள்ளனர்.