அதிகாரிகளை மூங்கிலால் அடியுங்கள் - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்

minister giriraj singh bamboo
By Jon Mar 07, 2021 11:24 AM GMT
Report

மக்கள் குறைகளை தீர்த்து வைக்காத அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகார் மாநிலம் பெகுசராயில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கிரிராஜ் சிங்.

தனது துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் பொதுமக்களின் குறைகளை கண்டுகொள்வதில்லை என எனக்கு புகார் வந்துள்ளது. அப்போது அவர்களிடம் நான், இது போன்று நடக்க கூடாது என கூறியுள்ளேன். ஒருவேளை அவர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள்.

அதிகாரிகளை மூங்கிலால் அடியுங்கள் - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர் | Officer Bamboo Controversial Union Minister

அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால் பிரச்சினையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என் பலத்தைக் காட்டுகிறேன்என கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ஒருவர், அரசு அதிகாரிகளை மக்களே அடியுங்கள் என பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.