அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவியில் இருந்து நீக்குங்க : இபிஎஸ் பரபரப்பு அறிக்கை
அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவியிலிருந்து விலக வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான்
தமிழகத்தில் தடையில்லா கள்ளச்சாராய விற்பனைக்கு துணை போகும் திமுக அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கும், சட்ட விரோத பார் நடத்தும் தன் கட்சிக்காரர்களுக்கும் ஆதரவாக செயல்படும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும்.
எடப்பாடி அறிக்கை
அமைச்சர் செஞ்சி மஸ்தான் சட்டவிரோதமாக பார் நடத்துபவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக இபிஎஸ் குற்றசாட்டியுள்ளார். மது விற்பனை தொடர்பாக அமைச்சரின் சொந்த ஊரான செஞ்சியில் மட்டும் திமுக நிர்வாகிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலகாவிட்டால் முதலமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக்கில் கலால் முத்திரை உள்ள மது மட்டும் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இபிஎஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.