ஓடிசா ரயில் விபத்து : அதே பாதையில் 51 மணிநேரத்தில் மீண்டும் ரயில் இயக்கம்

Odisha Train Accident
By Irumporai Jun 05, 2023 03:06 AM GMT
Report

ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்த நிலையில் அதே பாதையில் 51 மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் ரயில் இயக்கபட்டது.

   ஒடிசா ரயில் விபத்து

நாட்டையே பதைபதைக்க வைக்க ஒடிசா ரயில் விபத்தின் தாக்கம் இன்னும் மக்கள் மத்தியில் குறையவில்லை. உடல்கள் சிதைந்து ரயில் விபத்தில் உயிரிழந்த தங்கள் உறவினர்களை இழந்தவர்களை இன்னும் பலர் தேடி வருகின்றனர்.

இந்த ரயில் விபத்து காரணமாக அப்பகுதியில் கிட்டத்தட்ட 3 நாட்களாக பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஓடிசா ரயில் விபத்து : அதே பாதையில் 51 மணிநேரத்தில் மீண்டும் ரயில் இயக்கம் | Odisha Train Accident Train Was Re Operated

மீண்டும் ரயில் போக்குவரத்து

இந்த நிலையில் ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் பெரும்பாலும் நிறைவுபெற்று, ரயில் விபத்து ஏற்பட்ட அதே பகுதியில் முதன் முதலாக சரக்கு ரயில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. இதனை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.