ஒடிசா ரயில்விபத்து, ரயில்களை இயக்கிய பைலட்டுகளுக்கு நோட்டீஸ் - விசாரணையில் வெளிவந்த தகவல்!
ஒடிசாவில் ரயில்விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அதனை இயக்கிய பைலட்டுகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து ஏற்பட்டது.

அதிவேகத்தில் சென்றபோது இந்த விபத்து ஏற்டபட்டதால் ரயில்கள் ஒன்றோடு ஒன்றாக மோதியதில் ரயில் பெட்டிகள் சிதறியது.
இதில் 288 பேர் பலியாகி உள்ளனர், சுமார் 1000 பேர் படுகாயம் அடைந்தனர்.
விசாரணை
இதனை தொடர்ந்து, ரயில் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் பாய்ண்ட் 17 ஏ மாறாததே என்று கூறப்பட்டது.
இதனால் அங்கு விபத்து ஏற்படுவதற்கு முன்பாக ரயில்களை இயக்கிய ஊழியர்கள் உட்பட மொத்தம் 55 பேருக்கு விசாரணையில் ஆஜராக கூறி நோட்டீஸ் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்திரி அனுப்பினார்.

மேலும், விபத்திற்குள்ளான ரயில்களை இயக்கிய பைலட்டுகள் மற்றும் லோகோ பைலட்டுகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணை குறித்து கூறுகையில், "நாங்கள் ரயில் ஓட்டுநரிடம் பேசினோம், அவர் சிக்னல் பச்சை நிறத்தில் இருப்பதை உறுதிப்படுத்தினார். எங்கள் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.
சிக்னல் சிவப்பு நிறமாக இருந்தால் அவர் கடந்து சென்றிருக்க மாட்டார். அதேபோல் அதிக வேகத்தில் செல்லவில்லை. ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சிக்னல் பச்சை நிறத்தில் தான் இருந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே சென்றுள்ளார்.
அதிபட்ச வேக அனுமதி (130 கிமீ/மணிக்கு அனுமதிக்கப்பட்டது) மற்றும் ரயில் ஓட்டுநர் மணிக்கு 128 கிமீ வேகத்தில் சென்றார்" என்று கூறியுள்ளனர்.