எலும்புக்கூடுடன் வங்கிக்கு வந்த நபர் - அதிர்ந்த அதிகாரிகள்

Odisha
By Fathima Apr 28, 2026 11:16 AM GMT
Report

இறந்துபோன தனது சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக எலும்புக்கூட்டை அண்ணன் சுமந்துகொண்டு வங்கிக்கு வந்த சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், கியோன்ஜர் மாவட்டத்தின் மல்லிப்ஷி கிராமத்தில், வசித்து வருபவர் ஜிது முண்டா(வயது 50). இவரது சகோதரி கல்ரா முண்டா 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அவரது குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டதால் வங்கியில் இருந்து பணத்தை எடுப்பதற்காக ஜிது முண்டா முயற்சித்துள்ளார்.

அவர்கள் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வேண்டுமென கோரியுள்ளார், ஜிது முண்டாவுக்கு அதை எப்படி பெறுவது என தெரியாத நிலையில் தனது சகோதரியின் எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு வந்துள்ளார்.

எலும்புக்கூடுடன் வங்கிக்கு வந்த நபர் - அதிர்ந்த அதிகாரிகள் | Odisha Man Brings Sister Skeleton To Bank

இதற்கு கண்டனம் தெரிவித்து மாணிக்கம் தாகூர் எம்.பி தனது எக்ஸ் தளத்தில், ஒடிசாவிலிருந்து வரும் இந்தக் செய்தி அதிர்ச்சியூட்டுவது மட்டுமல்ல..

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் ஆட்சியில் நமது வங்கி அமைப்பு எவ்வளவு ஆழமாகச் சிதைந்துவிட்டது என்பதையும் இது அம்பலப்படுத்துகிறது.

தன் சகோதரியின் மரணத்தை நிரூபித்து அவருக்கு சேர வேண்டிய பணத்தை பெறுவதற்காக ஒருவர் தனது சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்கு கொண்டுவரும் அளவுக்கு நிர்பந்திக்கப்படுகிறான், எந்த வகையான அமைப்பு இந்த அளவிலான கொடூரத்தை கோருகிறது? இது மனிதாபிமானமற்ற செயல் என பதிவிட்டுள்ளார்.