ஒடிசா அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 நோயாளிகள் மரணம்
ஒடிசாவின் கட்டாக்கில் எஸ்சிபி அரசு மருத்துவமனையின் Trauma Care ICUயில் அதிகாலை நடந்த தீ விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 10 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை 2.30 மணிமுதல் 3 மணியளவில் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது, விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உயிரிழந்தனர்.

நோயாளிகளை காப்பாற்ற முயன்ற போது 11 ஊழியர்களுக்கு தீக்காயம் ஏற்பட்டது, தீயணைப்பு வாகனம் விரைந்து வந்த தீயை அணைத்தனர்.
சுமார் 23 நோயாளிகள் வேறு அறைக்கு மாற்றப்பட்டதால் அவர்கள் உயிர் தப்பினர்.
விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர் மோகன் சரண் மாஜி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் முகேஷ் மஹாலிங் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
