ஒரிசாவில் 5 மாணவர்களுக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் கண்டுபிடிப்பு...!

Cold Fever Odisha
By Nandhini Feb 20, 2023 08:59 AM GMT
Report

ஒரிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

ஒரிசாவில் மூளைக் காய்ச்சல் கண்டுபிடிப்பு

இது குறித்து, பாலசோர் உதவி மாவட்ட மருத்துவ அதிகாரி (ADMO) கூறுகையில்,

ஒரிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், சோரோ கன்யாஷ்ரமில் 5 மாணவர்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பரிசோதனை செய்தனர். 25 மாணவர்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 5 மாணவர்களுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதனையடுத்து, 5 மாணவர்கள் பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்களுக்கு அறிகுறிகள் இல்லை என்றார்.

odisha-brain-fever-detected-5-students

ஜப்பானிய மூளைக்காய்ச்சல்

ஐப்பானில் 1871-ம் ஆண்டு முதன்முறையாக இந்த வைரஸ் கிருமி பரவியது. இந்த வைரஸ் கிருமியை ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் என்றும் அழைக்கின்றனர். இந்த வைரஸ், கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இவ்வகை வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் ஆசிய நாடுகளை பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உலக அளவில் வருடத்துக்கு 65,000க்கும் மேற்பட்டோர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் 25 சதவிகிதம் பேருக்கு மேல் உயிரிக்கும் அபாயம் ஏற்படும். காய்ச்சலில் இருந்து தப்பித்தாலும் மன அழுத்தம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட கோளாறுகள் பாதிக்கப்படும்.

2016ம் ஆண்டில், ஒரிசாவின் மல்கங்கிரி மாவட்டத்தில் பல குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூளை காய்ச்சலின் அறிகுறிகள்:

திடீரென அதிக காய்ச்சல்.

பிடிப்பான கழுத்து.

கடுமையான தலைவலி.

குமட்டல் அல்லது வாந்தி.

குழப்பம் அல்லது கவனம் செலுத்துவதில் சிக்கல்.

வலிப்புத்தாக்கங்கள்.

தூக்கம் அல்லது விழிப்பதில் சிக்கல்.

இப்போது வரை, இந்த வைரஸ் மூளைக் காய்ச்சலுக்கு மருந்து இல்லை.

நோய் தொடங்கிய உடனேயே குழந்தைகளின் நிலை மோசமடையும். இதன் வேகம் மிகவும்ஆபத்தானது.