25 அரசியல் தலைவர்கள்.. ஒடிசா அரசியலுக்கு ஆட்டம் காட்டிய இளம்பெண் - பகீர் சம்பவம்

India Crime Money
By Sumathi Oct 15, 2022 03:00 PM GMT
Report

அரசியல் பிரபலங்களையும், பெரும் பணக்காரர்களையும் மிரட்டி ஏறத்தாழ ரூ.30 கோடி ரூபாய் ஏமாற்றப்பட்டுள்ளது.

இளம்பெண் மிரட்டல்

ஒடிசா, கலஹண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா(26). இவரின் கணவர் ஜெகபந்து பழைய கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வந்துள்ளார். இதனால் இவருக்கு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்று பணக்காரர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

25 அரசியல் தலைவர்கள்.. ஒடிசா அரசியலுக்கு ஆட்டம் காட்டிய இளம்பெண் - பகீர் சம்பவம் | Odisha 26 Old Girl Forgery To Political Persons

இதன் மூலம் அர்ச்சனா அவர்களுக்கு அறிமுகமாகி பழகியுள்ளார். தொடர்ந்து, பல பெண்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்தப் பெண்களுடன் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை எடுத்து அவர்களை மிரட்டி, கணவனும் மனைவியும் பணம் பறிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதிர்ச்சி தகவல்

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர், சில பெண்களுடன் தான் இருக்கும் புகைப்படங்களைக் காட்டி அர்ச்சனா தன்னிடம் ரூ. 3 கோடி கேட்டதாகப் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டார்.

25 அரசியல் தலைவர்கள்.. ஒடிசா அரசியலுக்கு ஆட்டம் காட்டிய இளம்பெண் - பகீர் சம்பவம் | Odisha 26 Old Girl Forgery To Political Persons

மேலும், அவரிடமிருந்து 4 செல்போன்கள், 2 லேப்டாப், பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பல முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வீடியோக்கள் அவற்றில் இருந்துள்ளன. அர்ச்சனாவின் வலையில் சிக்கியவர்கள் 18 எம்எல்ஏக்கள், 7 அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் என தெரிய வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பாஜக நிர்வாகி பாபு சிங் கூறியிருக்கிறார். ஆனால் இந்த குற்றச்சாட்டிற்கு பிஜேடி மறுப்பு தெரிவித்துள்ளது.