சற்று இரக்கம் காட்டிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 சரிந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.01) சரிந்துள்ளது.
சரிவு
அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 சரிந்து ரூ. 5,850 ஆகவும், சவரனுக்கு ரூ.120 சரிந்து ரூ. 46,800 ரூபாயாகவும் உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 15 சரிந்து ரூ.6,320 ஆகவும், சவரன் ரூ.50,560ஆக விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 30 பைசா உயர்ந்து ரூ.82.50 ஆகவும், லோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.82,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.