தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்! வெள்ளி விலையிலும் திடீர் மாற்றமா?
அக்டோபர் 29ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரிவைச் சந்தித்து வந்தது. அதன் பின்னர் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை உயர்ந்திருந்த நிலையில், இன்று எவ்வித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,195க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,560க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,195க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.1,05,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கத்தின் விலை என்ன? 22 காரட் தங்கத்தைப் போலவே, 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.10,800க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.86,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை சரிவு
தங்கத்தின் விலையில் மாற்றமில்லாத நிலையில், வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 சரிந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.215க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.