நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி - மீண்டும் உயர்ந்த தங்க விலை!

Silver Gold
By Vinoja Oct 27, 2026 07:31 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 27) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சரிவைக் கண்ட நிலையில், அதன் பின்னர் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி - மீண்டும் உயர்ந்த தங்க விலை! | October 27Th 2026 Gold And Silver Price In Chennai

அந்த வகையில், நேற்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085 ஆகவும், சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,04,680 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம் 

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை மேலும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,135 ஆகவும், சவரனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.1,05,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி - மீண்டும் உயர்ந்த தங்க விலை! | October 27Th 2026 Gold And Silver Price In Chennai

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.10,750 ஆகவும், சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.86,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி - மீண்டும் உயர்ந்த தங்க விலை! | October 27Th 2026 Gold And Silver Price In Chennai

மறுபுறம், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.220 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.