தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரன் ரூ.1,04,680 ஆக அதிகரிப்பு!

Silver Gold
By Vinoja Oct 26, 2026 05:31 AM GMT
Report

அக்டோபர் 26 இன்றைய விலை நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

கடந்த அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்து வந்தது.இதனைத் தொடர்ந்து, தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரன் ரூ.1,04,680 ஆக அதிகரிப்பு! | October 26Th 2026 Gold And Silver Price In Chennai

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்றும் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த அக்டோபர் 24ஆம் திகதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,070 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,04,560 ஆக விற்பனையானது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரன் ரூ.1,04,680 ஆக அதிகரிப்பு! | October 26Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய நிலவரம் 

இந்நிலையில், இன்றும் 22 காரட் தங்கத்தின் விலை உயர்வைக் கண்டுள்ளது. இதன்படி, கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,085 ஆகவும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,04,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில், 18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இதன்படி, கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,705 ஆகவும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.85,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரன் ரூ.1,04,680 ஆக அதிகரிப்பு! | October 26Th 2026 Gold And Silver Price In Chennai

வெள்ளி விலை 

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.220க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.