அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை - மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,536 சரிவு!

Silver Gold
By Vinoja Oct 14, 2026 05:25 AM GMT
Report

இன்றைய ( அக்டோபர் 14) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகைப் பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,536 வரை குறைந்துள்ளது.

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை - மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,536 சரிவு! | October 14Th 2026 Gold And Silver Price In Chennai

இன்றைய விலை நிலவரம்

இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து ரூ.13,590 ஆகவும், சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.1,08,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.11,165 ஆகவும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.89,320 ஆகவும் உள்ளது.

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை - மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.2,536 சரிவு! | October 14Th 2026 Gold And Silver Price In Chennai

இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.