பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு : பாஜக நிர்வாகி அறிவிப்பு

Pakistan
By Irumporai Dec 18, 2022 09:30 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தலையினை கொண்டு வருவோருக்கு பாஜக நிர்வாகி பரிசு அறிவித்துள்ளார்.

மோடி குறித்து சர்ச்சை பேச்சு  

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுதுறை அமைச்சராக இருப்பவர் பிலால் பூட்டோ. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இவர் பிரதமர் மோடி குறித்து விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பூட்டோ தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு : பாஜக நிர்வாகி அறிவிப்பு | Ocal Bjp Member Announce Reward For Bilaval

தலைக்கு 2 கோடி

இந்த நிலையில் பிலால் பூட்டோவை கண்டித்து உத்திர பிரதேச மாநிலித்தில் உள்ள பாஜக உள்ளூர் நிர்வாகி மனுபால் பன்சால் என்பவர், பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் பிலால் பூட்டோவின் தலையை கொண்டு வந்தால் ரூ.2 கோடி பரிசு கொடுப்பேன் என கூறியுள்ளார்.

அவரின் இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.