சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசம் - ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமான கருந்துளை கண்டறியப்பட்டுள்ளது.
குவாசர்
ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் (ESO) VLT எனப்படும் மிகப் பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி வானியலாளர்கள் கருந்துளை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை கண்டிராத அளவுக்கு மிகவும் பிரகாசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கருந்துளை குவாசர் என்று அழைக்கப்படுகிறது. அவற்றின் மையங்களில் உள்ள மிகப்பெரிய கருந்துளைகளால் இயக்கப்படுகிறது.
பிரகாசமான கருந்துளை
இதில் வாயு மற்றும் தூசி விழுவதால், அவை மின்காந்த கதிர்வீச்சை வெளியிடுவதுடன் தீவிர ஒளியை உருவாக்குகின்றன. J0529-4351 என்று பெயரிடப்பட்ட இந்த குவாசர், தினந்தோறும் ஒரு சூரியனுக்கு சமமான அளவுக்கு வளர்ந்து வருவதாகவும், சூரியனை விட 500 டிரில்லியன் மடங்கு பிரகாசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாசர் 1980ஆம் ஆண்டு முதல் காணப்பட்டாலும், வானியலாளர்கள் அதை சமீபத்தில் தான் அங்கீகரித்துள்ளனர். பிரபஞ்சத்தை புரிந்துகொள்வதற்கு குவாசர்கள் மற்றும் கருந்துளைகளை படிப்பது மிகவும் அவசியம்.
அது எவ்வாறு உருவானது, விண்மீன் திரள்கள் எவ்வாறு உருவாகின என்பதற்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களின் கடவுச்சீட்டுக்கான புகைப்படத்தில் சிக்கல்: சிறீதரன் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை IBC Tamil
