நீங்க கல்யாணம் செய்யப் போகிறீர்களா? இந்த 3 கேள்விகள் முக்கியம் : அட்வைஸ் கொடுக்கும்ஒபாமா
திருமணம் ஆவதற்கு முன்பு கணவனும் மனைவியும் இந்த மூன்று கேள்விகள் முக்கியம் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபமா தெரிவித்துள்ளார்.இரு மணங்கள் சேரும் திருமணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை திருமணம் என்பது வாழ்வின் முக்கியமான பந்தமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அயல் நாடுகளில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாக உள்ளது, இந்த நிலையில் பாராக் ஒபாமா மிச்செல்லி இருவரும் சிறந்த கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
இந்த நிலையில் தங்களை போன்று மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வதற்கு இந்த மூன்று கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொள்வது முக்கியம் என முன்னாள் அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அந்த மூன்று கேள்விகள் உங்களுக்காக
உங்கள் பாட்னர் எதில் ஆர்வமிக்கவர்?
நீங்கள் உங்கள் வாழ்வின் பெரும் பகுதியினை எல்லாரைவிடவும் உங்கள் பாட்னருடன் செலவிடுவீர்கள். ஆகவே அவர் ஆர்வமிக்கவராக இருக்க வேண்டும் எனக் கூறுகிறார் ஒபாமா.

அப்போதுதான் உங்கள் பாட்னர் என்ன நினைக்கின்றார்? என்ன செய்யப்போகின்றார் ?என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் மொத்த வாழ்க்கையுமே கடினமாகிவிடும் எனக் கூறியுள்ளார்.
உங்க பாட்னர் காமெடி குணம் உள்ளவர?
உங்களும் வரும் பாட்னர் தங்களது செயல்கள் மூலமாக நகைச்சுவை திறன் இருந்தால் அவர் உங்களின் வாழ்வின் ஒரு புதியலாக இருப்பார்.
ஏனென்றால் வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சில தருணங்களில் சலிப்பு வரும் அப்போது உங்கள் பாட்னரிடம் இருக்கு நகைச்சுவை குணம்தான் உங்கள் வாழ்க்கையினை அழகாக்கும் உங்களின் திருமண வாழ்க்கியினை சிறப்பாக்கும் என ஒபாமா கூறுகின்றார்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு : ரிஷி சுனக் வெளியிட்ட பிரச்சார வீடியோ
உங்க பாட்னர் சிறந்த பெற்றோராக இருப்பாரா?
இந்த கேள்வி மிக முக்கியம் எனக் கூறும் ஒபாமா இந்த கேள்விதான் உங்கள் பாட்னரை திருமணம் செய்யலாம வேண்டாமா என முடிவு செய்வது. உங்கள் வாழ்வின் பொக்கிஷமாக உள்ள குழந்தைகளுக்கு அன்பான அக்கறையான நல்ல பண்புகளை விதைக்ககூடியவராக இருப்பது முக்கியமானதும் அவசியமானதும் கூட என ஒபாமா கூறியுள்ளார்.
இந்த மூன்று கேள்விகளை உங்கள் வாழ்க்கியின் பாட்னரை தேர்ந்தெடுக்கும் முன்பு இந்த மூன்று கேள்விகளுக்கான விடையினை தெரிந்து கொண்ட பின்பு திருமணத்தை முடிவு செய்யலாம் எனக் கூறியுள்ளார்.