ஓ சொல்றியா பாட்டு வரியெல்லாம் உண்மை தானேங்க”- கலகலப்பாக பேசிய அல்லு அர்ஜுன்
ஓ சொல்றியா’ பாடலின் வரிகள் உண்மைதான் என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் கூறியுள்ளார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா திரைப்படம் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தவாரம் வெளியாகிறது. அதை முன்னிட்டு, படக்குழுவினர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
அப்போது, தனது தமிழ் பிழையுடன் இருந்தாலும், தமிழில் பேசினால்தான் அழகாக இருக்கும் என குறிப்பிட்ட நடிகர் அல்லு அர்ஜூன் படத்தில் செம்மரம் ஒரு பின்னணி மட்டுமே எனவும், மற்றபடி முழுக்க முழுக்க புஷ்பா எனும் கதாபாத்திரத்தை சுற்றியே ஒட்டுமொத்த படமும் நகரும் எனவும் குறிப்பிட்டார்.
அப்போது, ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு கிடைத்துள்ள எதிர்ப்பு குறித்தும், ஆண்கள் நல அமைப்பின் கண்டனம் குறித்தும் அல்லு அர்ஜூனிடம் செய்தியாளர்கள் தரப்பிலிருந்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பாடல் வரிகள் உண்மைதானே” என கலகலப்பாக கூறினார்.
தமிழ் சினிமாவில் அல்லு அர்ஜூனை போல யார் சிறப்பாக நடனம் ஆடுகின்றனர் என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொருவர் வருவார். முன்பு கமல்ஹாசன் இருந்தார்.
பின் விஜய் வந்தார், பின் தனுஷ் - சிம்பு என எல்லோரும் வந்தனர். இப்போதும் கூட, டாக்டர் படத்தில் செல்லம்மா பாட்டில் சிவகார்த்திகேயன் சிறப்பாக நடனமாடியிருந்தார்.
சொல்லப்போனால், எனக்கு பெர்சனலாக டாக்டர் படம் மிகவும் பிடித்திருந்தது.
படக்குழுவுக்கு என் பாராட்டுக்கள். எனக்கு எல்லோரின் நடனுமுமே பிடிக்கும். எல்லொருமே தனித்துவமாக சிறப்பாக உள்ளனர்” என்று கூறியிருந்தார்.
திரைமறைவில் நடந்த டீல் - திமுக ஆதரவோடு முதல்வராக எடப்பாடி - அம்பலப்படுத்திய சி.வி.சண்முகம் IBC Tamil
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலட்சுமி ராஜ யோகம் : இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
குதிரை பேரம்..! தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏ நீக்கம் - உச்சக்கட்ட கோவத்தில் TTV தினகரன் IBC Tamil