திமுக கூட்டணியில் இணைகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?
NDA கூட்டணியில் இடம்பெறும் என கணிக்கப்பட்ட தேமுதிக, திமுக கட்சியில் இ்ணைந்து அதிர்ச்சிகொடுத்தது, இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
அவரது மகன் ரவீந்திரநாத் உடன் சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்டாலினின் ஐந்தாண்டு கால ஆட்சி நிறைவு பெற்றதற்கு வாழ்த்தினேன், மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு உள்ளது, தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறியிருந்தேன், வழி பிறந்துவிட்டது என தெரிவித்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் எண்ணம் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், முதலமைச்சருடனான சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.