வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

ADMK O. Panneerselvam D. Jayakumar
By Irumporai Aug 30, 2022 10:53 AM GMT
Report

வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ தேன் விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

சர்வாதிகார போக்கு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் : தமிழகத்தில் திமுக அரசு சர்வாதிகார போக்குடன் செயல்பட்டு வருவதாக விமர்சித்தார். பதவி ஆசை கொண்ட பன்னீர்செல்வம், வெவ்வேறு துறை அமைச்சர்களிடம் இருந்து அவருக்கு தேவையான துறைகளை பிரித்து எடுத்துக் கொண்டு செயல்பட்டவர் பன்னீர்செல்வம் என்றார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம்  : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  கிண்டல் | O Panneerselvam Was Fake Ex Minister Jayakumar

வியாசர்பாடி கேபி பார்க் குடியிருப்பு கட்டப்பட்டதில் அதிக அளவில் கமிஷன் பெற்றதாலயே, தரமற்ற குடியிருப்புகள் கட்டப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

வசூல்ராஜா பன்னீர் செல்வம்

அதிமுக ஆட்சியில் வேறு எந்த துறையிலும் ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்படாமல் இருந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் துறையில் மட்டும் ஊழல் புகார் சொல்லப்பட்டதற்கு அதுவே காரணம் என்றார். உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பன்னீர்செல்வம் இருப்பதாக குறிப்பிட்ட அவர்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம்  : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  கிண்டல் | O Panneerselvam Was Fake Ex Minister Jayakumar

வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம் என்று கூறிய ஜெயக்குமார் பன்னீர் செல்வம் பண்ணை வீட்டில் நடத்திய ஆலோசனையில் 50 பேரும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 முதல் 15 பேர் மட்டுமே பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறினார்.

துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர்

டிடிவி, சசிகலாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்ற அவர், துரோகம் செய்வதில் கைதேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்றார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல், வசூல்ராஜா பன்னீர் செல்வம்  : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  கிண்டல் | O Panneerselvam Was Fake Ex Minister Jayakumar

தமிழகத்தில் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்கதாக தெரிவித்த டி.ஜெயக்குமார், கஞ்சா, குட்கா, ப்ரெளவுன் சுகார் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக்கொண்டு காவலர்கள் அமைதியாக இருப்பாதாக குற்றம்சாட்டினார்.