ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கணிப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசனுடனான சந்திப்பின் மூலம் ஓபிஎஸ் திமுகவின் ’பி’ டீம் என்பது நிரூபணமாகியுள்ளது.
அவர் விரைவில் திமுகவில் இணைந்து விடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தைக் காண வந்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும், முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வைரலாகின.
இந்த சந்திப்புக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘’ சபரீசன் - ஓபிஎஸ் சந்திப்பின் மூலம், ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டி பேசினார்.
தற்போது பூனைக் குட்டி வெளியே வந்த கதையாக மக்களுக்கு சபரீசனுடனான சந்திப்பின் மூலம் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுபவதிற்கில்லை’’ என்றார்.
ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு பேர் மேட்ச் பாக்க போயிருக்காங்க அவ்ளோதான்
— Kavi (@kavii_talks) May 6, 2023
இதுல பெருசா பேச ஒன்னு இல்லை
pic.twitter.com/VQkeBm7SkV