எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை - ஓ.பன்னீர்செல்வம் உறுதி!
எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சி பெயர், சின்னம் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம்
அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம் "அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு என்பது தற்காலிக அமைப்பு தான். எந்த காலத்திலும் தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. நீதிமன்ற தீர்ப்பு நமக்கு சாதகமாகவே வரும்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. தேர்தலை சந்திக்க கீழ் மட்டம் வரை நமது கட்டமைப்பு பலமாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். உண்மையான அதிமுக தொண்டர்களின் உரிமைகளை நிச்சயம் மீட்டெடுப்போம்" என்று கூறினார்.