முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.

M K Stalin AIADMK O. Panneerselvam
By Thahir Feb 25, 2023 02:58 AM GMT
Report

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்

95 வயதான ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவர்கள் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

O. Panneerselvam

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனது தாயார் இறந்த செய்தியை அறிந்த ஓபிஎஸ் மருத்துவமனையிலேயே கதறி அழுதார்.

இதைத்தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தேனியிலுள்ள பெரியகுளம் வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் காலமானார்