"உழைப்பால் உயர்ந்த அஜித்” - முதல் ஆளாய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்
நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் அஜித் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள், இரத்ததானம், அன்னதானம், கோவில்களில் சிறப்பு பூஜை ஆகியவை செய்யவுள்ளனர்.
உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
— O Panneerselvam (@OfficeOfOPS) April 30, 2022
சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏராளமான ரசிகர்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர். ஹேஷ்டேக்குகள், பேன் மேட் போஸ்டர்கள் என சமூக வலைதளங்களை அமர்களப்படுத்தி வரும் நிலையில் அஜித்தின் 62வது படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் அஜித்துக்கு ட்விட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய மே தின நாளன்று பிறந்து, உழைப்பால் உயர்ந்து, பல கோடி ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட திரைப்பட நடிகர் திரு. அஜித்குமார் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!” என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.