ஈ.பி.எஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு - ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய திட்டம்..!

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 20, 2022 11:02 AM GMT
Report

ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈபிஎஸ்-க்கு சாதகமான தீர்ப்பு 

அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றி, அதன் சாவியை இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈ.பி.எஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு - ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய திட்டம்..! | O Panneerselvam Plans To Appeal

விரும்பத்தகாத சம்பவங்கள் தவிர்க்கும் வகையில், கட்சி தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்றும் அலுவலகத்திற்கு போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகம் சாவியை ஈபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஓ.பி.எஸ் மேல்முறையீடு செய்ய திட்டம் 

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கில் ஈபிஎஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஈ.பி.எஸ்-க்கு சாதகமாக வந்த தீர்ப்பு - ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்ய திட்டம்..! | O Panneerselvam Plans To Appeal

இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் கூறுகையில், அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.டி.ஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. இந்த வழக்கின் உத்தரவு மேல்முறையீடு செய்ய தகுந்தது என்றும் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.