NDA கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம்? விரைவில் வெளியாகும் அறிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தினந்தோறும் புதுவித அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. திமுக-வை ஆட்சியில் இருந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கூறிக்கொண்டிருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.

இக்கூட்டணியில் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார் என்ற நம்பிக்கை இருப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஒத்துக்கொண்டதாகவும், ஓ.பன்னீர்செல்வம் இணைந்தால் அவருக்கு மூன்று தொகுதிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.