ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்து பேசினார் அண்ணாமலை - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

K. Annamalai Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Nandhini Jun 23, 2022 11:20 AM GMT
Report

ஒற்றைத் தலைமை

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் - இபிஎஸ் வந்தனர்.

ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்

அப்போது, பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பி.எஸ். வெளிநடப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்தார். அப்போது அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். சந்தித்த அண்ணாமலை

இந்நிலையில், முதலில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதனையடுத்து, ஓ. பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசியுள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலை டுவிட்

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவையும் வெளியிட்டுள்ளார் அண்ணாமலை. அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்து தற்போது பரபரப்பு அடங்கியுள்ளது. அண்ணாமலை மற்றும் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.