அதிமுக தலைமை நிர்வாகி ஆலோசனை கூட்டம் - தேனியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டார் ஓ.பி.எஸ்.
ஒற்றைத் தலைமை
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ் - இபிஎஸ் வந்தனர்.
ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ் கோஷம்
அப்போது, பொதுக்குழு அரங்கிற்கு ஓ.பி.எஸ். வந்த வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக தொடர்ந்து கோஷமும், முழக்கமும் எழுப்பப்பட்டது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி ஆதாரவாளர்களால் ஓ.பி.எஸ். ஒழிக, துரோகி ஒழிக என்று கூச்சலிட்டு கோஷம் எழுப்பினர். அந்த நேரத்தில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தண்ணீர் பாட்டில் வீசி தாக்குதல்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையம் நிராகரிப்பதாக எடப்பாடி தரப்பு அறிவித்ததால் ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந்தார். அப்போது, ஓ.பி.எஸ். மேடையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பி.எஸ். வெளிநடப்பு செய்த போது அவர் மீது தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பெரும் ஏற்பட்டது.
டெல்லி பயணம்
எடப்பாடியின் பாய்ச்சலை தடுப்பதற்கு ஓபிஎஸ் டெல்லிக்கு விஜயம் செய்துவிட்டு வந்திருக்கிறார். அங்கு மோடியை சந்தித்த அவர் கட்சி விவகாரங்கள் குறித்து பேசியதாகவும், டெல்லி சரியான சிக்னல் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவர் நீதி கேட்டு தொண்டர்களை சந்திக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
மதுரையில் சுற்றுப்பயணம்
ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் சுற்றுப்பயணம் தொடங்கினார். இந்த சுற்றுப்பயணத்தில் ஓ.பி.எஸ்.க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தேனியிலிருந்து சென்னை வருகிறார்
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனியிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் சென்னைக்கு ஓபிஎஸ் வருவதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.