மாலை போட்ட தொண்டர்.. - கடுப்பான இ.பி.எஸ் - வைரலாகும் வீடியோ
ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஈபிஎஸ் தரப்பு தெரிவித்தது. இதனால், அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.
பொதுக்குழுவுக்கு வந்த ஓபிஎஸ் - இபிஎஸ்
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை வானகரம் மண்டபத்தை வந்தடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுத்து முதல் ஆளாக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்தார். இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தடைந்துள்ளார்.
கடுப்பான எடப்பாடி
அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் எடப்பாடி பேசிக்கொண்டிருந்தபோது, தொண்டர் ஒருவர் பெரிய மாலை கொண்டு வந்து எடப்பாடி கழுத்தில் போட்டார். அப்போது, கடுப்பான எடப்பாடி திட்டி அந்த தொண்டரை அனுப்பினார். இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோட்டாபயவின் வீட்டில் பிள்ளையான் குழுவுடன் அசாத் மௌலானா! அம்பலப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் IBC Tamil
அரசியல் பேரங்களை அம்பலப்படுத்தியதால் சுட்டுக் கொல்லப்பட்ட சாட்சிகள்! நீர்கொழும்பு சிறையிலும் 20 துப்பாக்கிச் சூடு IBC Tamil
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil