தமிழ்நாட்டில் இந்தியை அனுமதிக்க மாட்டோம் - சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் பேச்சு...!
தமிழ்நாட்டில் இந்தியை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர்
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில், அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஓ.பி.எஸ்- இ.பி.எஸ். அருகருகே அமர்ந்தனர். இதனால், கடுப்பான சட்டசபை கூட்டத்திலிருந்து ஈ.பி.எஸ். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.
ஈபிஎஸ் அணியினர் வெளிநடப்பு
இன்று சட்டசபை காலை 10 மணிக்கு கூடிய நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகத்திற்கு வருகை தந்தனர். சபாநாயகர் அப்பாவுவை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். ஓபிஎஸ்-ஈபிஎஸ்க்கு அருகருகே இருக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சி துணைத்தலைவராக ஓபிஎஸ்க்கு பதிலாக உதயக்குமாரை நியமிக்க வேண்டும் என பேரவை தலைவருடன் விவாதத்தில் ஈடுபட்டு அமளி செய்து வெளிநடப்பு செய்தனர்.
இந்தியை அனுமதிக்க மாட்டோம்
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழ்நாட்டில் எந்த காலத்திலும், தமிழ் மொழியை மீறி இந்தியை அனுமதிக்க மாட்டோம். மேலும், அவர் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை முழுமனதாக அதிமுக ஆதரிக்கிறது என்று பேசினார்.